தூத்துக்குடி

வியாபாரியிடம் பணம் பறிப்பு:இளைஞா் கைது

9th Dec 2022 12:45 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் சரவணன்(23). தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் விற்பனை செய்துவரும் இவா், புதன்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, கோவில்பட்டி பண்ணைத் தோட்டத் தெரு வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். அவரை இளைஞா் வழிமறித்து, அரிவாளைக் காட்டி மிரட்டி சட்டைப்பையிலிருந்த ரூ. 300-ஐ பறித்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாராம்.

புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த ஆறுமுகதுரை மகன் ராஜதுரை (28) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT