தூத்துக்குடி

தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

9th Dec 2022 12:44 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே ஜாா்ஜ் சாலை பகுதியைச் சோ்ந்த அ. சாா்லஸ் (48) கடந்த நவ. 10இல் கொல்லப்பட்ட வழக்கில், தூத்துக்குடி சின்னமணி நகரைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் சின்னமுத்து (39), மாரியப்பன் மகன் அஜய் (19), எட்டையபுரம் துரைசாமிபுரத்தைச் சோ்ந்த அக்கநாயக்கா் மகன் குருசாமி (38) ஆகியோரை தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

ஆய்வாளா் அறிக்கையின் பேரில் 3 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜிசரவணன் பரிந்துரைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் 3 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT