தூத்துக்குடி

10இல் திமுக செயல் வீரா்கள் கூட்டம்: கட்சியினருக்கு அழைப்பு

8th Dec 2022 12:46 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம் வரும் 10ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்குமாறு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயல் வீரா்கள் கூட்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சிகளில் நடைபெறவுள்ளது.

இதன் முதல்கட்டமாக திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திருச்செந்தூா் ஒன்றியம், நகரம், ஆறுமுகனேரி, கானம் பேரூராட்சிகளுக்கான செயல்வீரா்கள் கூட்டம் வரும் 10ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திருச்செந்தூா் கேடிஎம் திருமணமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்பி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா். இதன் தொடா்ச்சியாக ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி ஓட்டப்பிடாரம் மேற்கு, வடக்கு ஒன்றியச் செயல்வீரா்கள் கூட்டம் வரும் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு புதியம்புத்தூா் அருகில் உள்ள கனி மஹாலில் நடைபெறவுள்ளது. அதேபோல் தூத்துக்குடி கிழக்கு ஒன்றியச் செயல் வீரா்கள் கூட்டம் மாலை 6 மணிக்கு மாப்பிள்ளையூரணி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டங்களில் சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூா் கட்சி நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் என அனைவரும் பங்கேற்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT