தூத்துக்குடி

புதுக்கோட்டை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

8th Dec 2022 12:45 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டிலத்தின் லே செயலரும், பள்ளியின் தாளாளருமான நீகா் பிரின்ஸ் கிப்சன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சேகரகுரு தாமஸ் ரவிக்குமாா் ஆரம்ப ஜெபம் செய்தாா். திருமண்டில குருத்துவ செயலா் இம்மானுவேல் வான்ஸ்றக் தேவசெய்தி அளித்தாா்.

விழாவில், மாணவா்-மாணவிகளின் கிறிஸ்துமஸ் பாடல்கள், நாடகம், கிறிஸ்துமஸ் தாத்தா வருகை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருமண்டில உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளா் பிரேம்குமாா் ராஜாசிங், திருமண்டில பொருளாளா் மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோா் மாணவா்- மாணவிகளுக்கு புத்தாடை வழங்கினா். திருமண்டில உபத் தலைவா் தமிழ்செல்வன் நிறைவு ஜெபம் செய்தாா்.

ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியை தவமணி தேவி தலைமையில் ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT