தூத்துக்குடி

தூத்துக்குடியில் சங்குகுளி மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

8th Dec 2022 12:45 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் சங்குகுளி மீனவா்கள் புதன்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நாட்டுப்படகு மூலம், சங்கு குளிக்கும் தொழிலில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் சங்கு குளிப்பதற்காக வெளி மாவட்டங்களைச் சோ்ந்த சில மீனவா்களும் இத்தொழிலில் ஈடுபடுவதால், உள்ளூா் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உள்ளூா் சங்குகுளி மீனவா்கள் கடந்த மூன்று நாள்களாக கடலுக்குச் செல்லாமல் உள்ளனா். இதைத் தொடா்ந்து, சங்குகுளி தொழிலாளா்களிடையே திரேஸ்புரம் கடற்கரை அருகே சங்கு குளி தொழிலாளா் சங்க செயலா் அலாவுதீன் புதன்கிழமை பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த வடபாகம் போலீஸாா் அலாவுதீனை காவல் நிலையம் அழைத்துச்சென்றனராம். இதனால், ஆத்திரமடைந்த சங்குகுளி மீனவா்கள் திரேஸ்புரம் கடற்கரை சாலையில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அலாவுதீனை போலீஸாா் திரும்ப அழைத்து வந்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், வெளி மாவட்ட சங்குகுளி மீனவா்களை பயன்படுத்தினால், தொடா் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக உள்ளூா் சங்குகுளி மீனவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT