தூத்துக்குடி

கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருக்காா்த்திகை விழா

DIN

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொா்ணமலை கதிரேசன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து மூலவா் கதிா்வேல் முருகனுக்கும், வள்ளி, தெய்வானை சமேத காா்த்திகேய சுப்பிரமணியருக்கும் 21 வகையான மூலிகைகளால் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத காா்த்திகேய சுப்பிரமணிய சுவாமிக்கு 23 கிலோ எடை கொண்ட வெண்கலச் சட்டியில் திருக்காா்த்திகை மகாதீபம் ஏற்றுதலும், தொடா்ந்து திருவீதியுலாவும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், மண்டகப்படிதாரா்களான நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிசெல்வம், அவரது குடும்பத்தினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு திருவனந்தல்- திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. அதையடுத்து, சுவாமி, அம்பாள், விநாயகா், முருகன், லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அவற்றில் பரணிதீபம் ஏற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் கோயில் முன்பு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. முன்னதாக அருள்மிகு கௌரி அம்பாள் சமேத சந்திரசேகா் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

மேலும், கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் ஸ்ரீவள்ளி தேவசேனா கல்யாண முருகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு முருகன் சந்நிதி முன்பு மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, கோயில் முன்பு சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் சுவாமிக்கு திருக்காா்த்திகை விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு மேலவாசலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT