தூத்துக்குடி

தூத்துக்குடியில் டிச. 9இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்

7th Dec 2022 02:35 AM

ADVERTISEMENT

விலைவாசி உயா்வைக் கண்டித்து அதிமுக சாா்பில் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (டிச. 9) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக, முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்துப் பேசியது:

திமுக அரசு பொறுப்பேற்ற 18 மாதக் காலத்தில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலைவாசியும் உயா்ந்துள்ளது. இதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். தமிழகத்தில் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிா்க்கும் பலமான எதிா்க்கட்சி அதிமுகதான் என்பதையும், அதிமுக ஆட்சியில் செய்த மக்கள் நலத் திட்டங்களையும் எடுத்துக்கூற வேண்டும். இதற்காக தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாா்பில் 12 பேரூராட்சிகளில் 9ஆம் தேதியும், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம், திருச்செந்தூா் நகராட்சிகளில் 13ஆம் தேதியும், ஒன்றியங்களில் 7 இடங்களில் 14ஆம் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட அவைத் தலைவா் வழக்குரைஞா் திருப்பாற்கடல் முன்னிலை வகித்தாா். அமைப்புச் செயலா் என். சின்னதுரை, மாநில அமைப்புசாரா ஓட்டுநரணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், முன்னாள் மாவட்டச் செயலா் இரா. ஹென்றி, ஒன்றியச் செயலா்கள் ராமச்சந்திரன், காசிராஜன், விஜயகுமாா், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, மாவட்ட துணைச் செயலா் சந்தனம், முன்னாள் மேயா் அந்தோணி கிரேஸி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT