தூத்துக்குடி

திருச்செந்தூரில் அம்பேத்கா் நினைவு நாள்

7th Dec 2022 02:36 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாா்பில் திருச்செந்தூா் நகராட்சி டாக்டா் அம்பேத்கா் நினைவுப் பூங்காவில் உள்ள பெயா்ப் பலகைக்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்டப் பொருளாளா் சி.பா. பாரிவள்ளல், மாவட்ட செய்தித் தொடா்பாளா் வடிவேல்முத்து, நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் அரசூா் ராஜ்குமாா், திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் கோ. வெற்றிவேந்தன், தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலச் சங்க மாநிலத் தலைவா் பிரேம்குமாா், மாவட்ட அமைப்பாளா்கள் மு. தமிழ்ப்பரிதி, வேம்படிமுத்து, மாவட்ட துணை அமைப்பாளா் இளந்தளிா் முத்து, உடன்குடி ஒன்றியப் பொருளாளா் டேவிட் ஜான்வளவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT