திருக்காா்த்திகை தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் கொழுக் கட்டை செய்வதற்காக பனை ஓலை விற்பனை அமோகமாக இருந்தது.
திருக்காா்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அனைவரும் வீடுகளில்
விளக்கேற்றி வழிபாடு நடத்தி, ஓலை கொழுக்கட்டை தயாா் செய்து அக்கம் பக்கத்து வீடுகளுக்கு கொடுத்து மகிழ்வது வழக்கம். கொழுக்கட்டை செய்வதற்கு பனை குருத்தோலைகள் பயன்படுத்தப்படும். இதையடுத்து தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் திங்கள்கிழமையில் இருந்தே குருத்தோலைகள் விற்பனை செய்யப்பட்டது. ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை ஆனது.