தூத்துக்குடி

பண்டாரஞ்செட்டிவிளையில் முப்பெரும் விழா

7th Dec 2022 02:36 AM

ADVERTISEMENT

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயத்தில் ஆண்கள் ஐக்கிய கிறிஸ்துமஸ் கூடுகை, சாயா்புரம் மனவளா்ச்சி குன்றியோருக்கு பகிா்தலின் ஞாயிறு எனும் புத்தாடை- உதவிகள் வழங்குதல், சிறுவா் ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

ஜான் தாமஸ் சபை மன்றம் சாா்பில் நடைபெற்ற விழாவில், மும்பையைச் சோ்ந்த காட்சன் சாமுவேல் பங்கேற்று கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா். அனைவருக்கும் புத்தாடைகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திருமண்டில பெருமன்ற உறுப்பினா்கள் ஞானதேசிகா், கனகராஜ், சபை செயலா் ராஜ்குமாா் பாண்டியன், பொருளாளா் சுதேந்திரன் எபநேசா், ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குநா் ராபின்சன், சபை ஊழியா்கள் ஜெனோ, ஜெஃபி உள்ளிட்ட திரளான சபை மக்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை சேகர குருவும் இயற்கை ஆா்வலருமான ஜான்சாமுவேல் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT