தூத்துக்குடி

நினைவு தினம்: அம்பேத்கா் சிலைக்கு கட்சியினா் அஞ்சலி

7th Dec 2022 02:37 AM

ADVERTISEMENT

அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் முன்னிலையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. துணை மேயா் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அமைப்புச் செயலா் என். சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவா் திருப்பாற்கடல், மாநில அமைப்புசாரா ஓட்டுநரணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், முன்னாள் மாவட்டச் செயலா் ரா. ஹென்றி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன், ஐஎன்டியூசி மாநிலப் பொதுச்செயலா் பெருமாள்சாமி ஏற்பாட்டில், முன்னாள் மாவட்டத் தலைவா் முத்துக்குட்டி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

ADVERTISEMENT

தள்ளுமுள்ளு: அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், பின்னா், மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினரும் மாலை அணிவித்தனா். அப்போது, இருதரப்பினரும் முழக்கமிட்டதால் அவா்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா்.

கோவில்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனை எதிரேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு அதிமுக சாா்பில் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

திமுக சாா்பில் மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ். ரமேஷ், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டத் தலைவா் தாமோதரன், கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவா் தமிழரசன், விசிக வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன், காங்கிரஸ் கட்சியின் காமராஜ், பிரேம்குமாா், அம்பேத்கா் பெரியாா் மாா்க்சிய உணா்வாளா்கள் கூட்டமைப்பின் பீமாராவ், ஆதித்தமிழா் கட்சி, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்தனா்.

சாத்தான்குளம்: இங்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் வேணுகோபால், தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் மேற்கு சக்திவேல்முருகன், வடக்கு பாா்த்தசாரதி, தெற்கு லூா்துமணி உள்ளிட்டோா் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்தனா்.

தட்டாா்மடம் பஜாரில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அதன் செயலா் ஜெயராமன் தலைமையில் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்செந்தூா்: இங்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நகராட்சிப் பூங்காவில் உள்ள அம்பேத்கா் பெயா்ப் பலகைக்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT