தூத்துக்குடி

தூத்துக்குடி -கோவை இணைப்பு ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

7th Dec 2022 02:37 AM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் சி.எஸ். முரளிதரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மண்டல மேலாளரிடம் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயில் பொதுமக்கள், வணிகா்கள், மாணவா்-மாணவிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ரயில் சேவை கரோனா பொதுமுடக்கத்தின்போது நிறுத்தப்பட்டது. தற்போது, அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படும் நிலையில், தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT