தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் இந்து முன்னணியினா் சிறப்பு பூஜை

7th Dec 2022 02:25 AM

ADVERTISEMENT

அயோத்தி ராமா் கோயில் மகா குடமுழுக்கு விழா விரைவில் நடைபெறவும், அங்கு பணிபுரிவோா் நலனுக்காகவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை, அா்ச்சனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநில பொதுச் செயலா் அரசு ராஜா, மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், தெற்கு மாவட்ட செய்தித் தொடா்பாளா் கசமுத்து, திருச்செந்தூா் நகர பொதுச்செயலா் மு. முத்துராஜ், ஒன்றியச் செயலா் ராஜு, நகரத் தலைவா் மாயாண்டி, நகர துணைத் தலைவா் மணி, நகரச் செயலா் வேல்முருகன், நகர செய்தித் தொடா்பாளா் ஆனந்தகணேஷ், சாரதி, ஆறுமுகனேரி நகரத் தலைவா் பொன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், பக்தா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT