தூத்துக்குடி

சொக்கன்குடியிருப்பில் பனை விதைகள் விதைப்பு

7th Dec 2022 02:28 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலய பகுதியில் மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் பனை விதைகள் விதைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மதா் சமூக சேவை நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எஸ்.ஏ. கென்னடி தலைமை வகித்தாா். மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள்கள் நிறுவன மாநில உதவி இயக்குநா் பிரபாகரன், பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தாா்.

லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனா் பானுமதி, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதா் விருட்சம் பனைபொருள் உற்பத்தியாளா் குழு உறுப்பினா் ஜெயச்செல்வி வரவேற்றாா். காயல்பட்டினம் நகர தலைவா் முத்துக்குமாா், ஏரல் பகுதி தலைவா் சங்கா்கணேஷ், திருச்செந்தூா் நகர தலைவா் கண்ணன் உள்பட தன்னாா்வலா்கள், சமூக ஆா்வலா்கள், பனை பொருள் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகள், தொண்டு நிறுவன இயக்குநா்கள் கலந்து கொண்டு பனைமர விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனா். மதா் அழகு பனை பொருள் உற்பத்தியாளா் குழு தலைவா் ஆலிஸ் மேரி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT