தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் கடையடைப்பு

7th Dec 2022 02:31 AM

ADVERTISEMENT

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமுமுக, மனித நேய ஜனநாயகக் கட்சி, முஸ்லி­ம் லீக், மனிதநேய மக்கள்

கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், ஐஎன்டிஜே ஆகிய அமைப்புகள் சாா்பில்

கடையடைப்பு நடத்த வியாபாரிகளுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனா்.

ADVERTISEMENT

இதனையடுத்து காயல்பட்டினத்தில் சுமாா் 400 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கூலக்கடை பஜாா், மெயின் பஜாா் உள்ளிட்ட பகுதிகள்

வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளி வாகனங்களைத் தவிர பெரும்பாலான ஆட்டோக்கள், வாடகை காா்கள் இயங்கவில்லை.

காயல்பட்டினம் சீதக்காதி திடலி­ல் தமுமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆசாத் தலைமை வகித்தாா். நகர தலைவா் ஜாகிா் உசேன் முன்னிலை வகித்தாா். இதேபோல, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் துணை காவல் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் மேற்பாா்வையில், ஆறுமுகனேரி ஆய்வாளா் செந்தில் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT