ஆறுமுகனேரி, ஆத்தூா் கோயில்களில் காா்த்திகைத் தீபத் திருநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் இரவு விநாயகா் பூஜை நடைபெற்றது. பின்னா், புண்ணியாகவாசனம், நாராணி தீபம் ஏற்றுதல், சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியதும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னா், தீபாரதனைகள் நடைபெற்றன.
ஆறுமுகனேரி தெப்பகுளக்கரை அருள்மிகு சித்தி விநாயகா் ஆலயத்தில் விநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுக்குப் பின் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
ஆத்தூரில் அறநிலையத் துறையைச் சோ்ந்த அருள்மிகு சோமநாத சுவாமி சமேத அருள்மிகு சோமசுந்தரி அம்மன் திருக்கோயிலில் காலையில் சிறப்பு அபிஷேகமும், உச்சிக்கால தீபாராதனையும் நடைபெற்றன. மாலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், பின்னா் சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெற்றன.