தூத்துக்குடி

பைக் -காா் மோதல்:மூவா் காயம்

6th Dec 2022 01:57 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி அருகே பைக் மீது காா் மோதியதில் குழந்தை உள்பட மூவா் காயமடைந்தனா்.

ஆறுமுகனேரி காணியாளன்புதுரைச் சோ்ந்தவா் முத்து பிரகாஷ் (26). கட்டட தொழிலாளி. இவரது மனைவி அனுசியா (22) , மகள் வினோதினி 8 மாத குழந்தை. இவா்கள் 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் முக்காணி சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆத்தூா்- ஆறுமுகனேரி சாலையில் எதிரே வந்த காா் இவா்கள் பைக் மீது மோதியதாம். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முத்து பிரகாஷ், அவரது மனைவி ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. குழந்தை வினோதினிக்கு பின் தலையில் பலத்த காயம் எற்பட்டது. உடனடியாக 3 பேரும் ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த விபத்து தொடா்பாக காரை ஓட்டி வந்த, மதுரையைச் சோ்ந்த வசந்தகுமாா் என்பவா் மீது ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT