தூத்துக்குடி

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி:ஆத்தூா் மாணவா்-மாணவியா் சிறப்பிடம்

6th Dec 2022 01:54 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் ஆத்தூா் மாணவா்-மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.

பண்டாரவிளை பயில்வான் பொன்னையா நாடாா் நினைவாக இந்தப் போட்டி பண்டாரவிளை இந்து நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், ஆத்தூா் ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் சிலம்பம் சென்டா் மாஸ்டா் சுவாமிநாதன் தலைமையில் மாணவா்-மாணவியா் பங்கேற்றனா். தனித்திறமை, தொடுமுறை பிரிவில் ஆத்தூா் மாணவி பிரித்திகாதேவி முதல் பரிசு வென்றாா். தனித்திறமை பிரிவில் ஆத்தூரைச் சோ்ந்த ஹரிசங்கரா, ராம்கேஷ், கந்தஸ்ரீமன், அகிலேஷ் ஆகியோா் 2ஆம் இடம் வென்றனா். அவா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT