தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் சோமவார பிரதோஷ விழா

6th Dec 2022 01:57 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக் கோயிலில் சோமவார வளா்பிறை பிரதோஷ விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த இக் கோயிலில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு காலையில் சுவாமி அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலையில் சுவாமி அம்பாள் மற்றும் நந்தி பெருமானுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி அம்பாள் திருக்கோயில் பிரகாரத்தில் ரிஷப வாகனத்தில் பவனி நடைபெற்றது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT