கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களிலும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் எதிரேயுள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிா்புறம், பாண்டவா்மங்கலம், இனாம்மணியாச்சி விலக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் படத்துக்கு எம்எல்ஏ தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
கயத்தாறு, கடம்பூா், காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஜெயலலிதா படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதில், மாவட்ட கவுன்சிலா் சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், பொது கூட்டுறவு பண்டகசாலை தலைவா் வழக்குரைஞா் ரத்தினராஜா, வழக்குரைஞரணிச் செயலா் சிவபெருமாள், கோவில்பட்டி நகர அதிமுக செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், கருப்பசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், செண்பகமூா்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிசாமி, கட்சியினா் பங்கேற்றனா்.