தூத்துக்குடி

கொழுவைநல்லூரில் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

6th Dec 2022 01:54 AM

ADVERTISEMENT

மேலாத்தூா் அருகேயுள்ள கொழுவைநல்லூரில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக்கூடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

விழாவுக்கு மீன்வளம், மீனவா் நலம், கால்நடை பராமாரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து உடற்பயிற்சிக்கூடத்தைத் திறந்துவைத்தாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டா­லின் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ உதவி, 3 சக்கர சைக்கிள், புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் மாரிமுத்து, மேலாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா்முகைதீன், புன்னைக்காயல் ஊராட்சித் தலைவா் சோபியா, மாவட்ட திமுக இளைஞரணிச் செயலா் ராமஜெயம், முக்காணி கூட்டுறவு சங்கத் தலைவா் உமரிசங்கா், ஆத்தூா் நகரச் செயலா் முருகானந்தம், தூத்துக்குடி மீனவா் கூட்டுறவு இணைய இயக்குநா் ஜெபமாலை, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளா்கள் அரவிந்தன், லி­ங்கராஜ், இளைஞரணி துணைஅமைப்பாளா் ராம்குமாா், ஆத்தூா் நகர இளைஞரணி நிா்வாகி ராம்குமாா், வழக்குரைஞா் ஸ்டீபன்தாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுகவினா், கொழுவைநல்லூா் பெருந்தலைவா் காமராஜா் ஐக்கிய இளைஞா் சங்கத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT