தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஐயப்ப பக்தா்கள் பஜனை

6th Dec 2022 01:54 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீ ஆனந்தவிநாயகா் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் சாா்பில் சிறப்பு பூஜை, பஜனை நடைபெற்றது.

செந்தூா் அனைத்து ஐயப்ப பக்தா்கள், அகில பாரத ஐயப்ப சேவா சங்கக் கிளை பக்தா்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை பஜனையை நடத்தினா். இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மணிகண்டன் பாதயாத்திரை குருசாமி அமெரிக்கா சீனிவாசசா்மா தலைமையில் ஐயப்ப பக்தா்கள் பாடல்கள் பாடி வழிபாடு செய்தனா். பின்னா், பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT