தூத்துக்குடி

அடைக்கலாபுரத்தில் இருபெரும் விழா

6th Dec 2022 01:57 AM

ADVERTISEMENT

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், அடைக்கலாபுரத்தில் இருபெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அடைக்கலாபுரத்தில் பழுதடைந்த குடிநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டடம் புதிதாக நவீன முறையில் சீரமைக்கப்பட்டு தமிழகத்திலேயே முதன்முறையாக பொலிவுரு அட்டை மூலம் தினமும் 20 லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம், கிராமத்தின் முக்கிய பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

குடிநீா் வழங்கும் பணியை ஊராட்சி மன்றத் தலைவா் மு.விஜயராஜ், ஊா் பிரமுகா் செல்லத்துரை ஆகியோரும், கண்காணிப்பு கேமராக்களை மெஞ்ஞானபுரம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜூம் திறந்து வைத்தனா். இதில், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வின், நங்கைமொழி ஊராட்சி துணைத் தலைவி பொன்செல்வி, வாா்டு உறுப்பினா்கள் பொன்பாய், மொ்சி மற்றும் திரளான ஊா்மக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT