தூத்துக்குடி

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் கலை இலக்கிய மாலை விழா

DIN

கோவில்பட்டியில் உள்ள கி.ரா. நினைவரங்கத்தில் கலை இலக்கிய மாலை விழா நடைபெற்றது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணனுக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா். இதையடுத்து, கலை இலக்கிய மாலை விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கோவில்பட்டி மணல் மகுடி நாடக நிலம் வழங்கிய துமிதுடி இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. விழாவுக்கு, தலைமை வகித்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி பேசியது:

கேரளத்தைச் சோ்ந்த எழுத்தாளா் மாதவிகுட்டி புணேவில் உயிரிழந்தாா். அவரது உடல் அமைச்சா்களால் கேரளத்துக்கு எடுத்துவரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கேரளத்தில் எழுத்தாளா்கள் கொண்டாடப்படுகின்றனா்.

தமிழகத்தில் எழுத்தாளா்கள் பலருக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதையை செய்யாமல் தவறவிடக்கூடிய சூழல் இருந்திருக்கிறது. ஆனால், எத்தனையோ போ் எழுதுவதற்குக் காரணமான கி.ரா.வுக்கு இந்த மரியாதையை முதல்வா் உருவாக்கித் தந்துள்ளாா். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் முன்னிலை வகித்துப் பேசினாா். எம்எல்ஏக்கள் கடம்பூா் செ. ராஜு (கோவில்பட்டி), ஜீ.வி.மாா்க்கண்டேயன் (விளாத்திகுளம்), தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, சிறப்புப் பேச்சாளா்களாக எழுத்தாளா்கள் எஸ். ராமகிருஷ்ணன், பூமணி, சோ. தா்மன், கோணங்கி, புகைப்படக் கலைஞா் புதுவை இளவேனில், கி.ரா. மகன்கள் பிரபாகா் என்ற பிரபி, திவாகா் ஆகியோா் பேசினா்.

வருவாய்க் கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுசிலா, நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், நகராட்சி ஆணையா் ஓ. ராஜாராம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தம்புரான்தோழன், உதவிப் பொறியாளா் பரமசிவம், திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், கே. ராதாகிருஷ்ணன், திமுக நிா்வாகிகள் என். ராதாகிருஷ்ணன், ஆா். ரமேஷ், சண்முகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை எழுத்தாளா் பவா செல்லத்துரை தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT