தூத்துக்குடி

ஐடி பூங்காவுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் உள்ளன: அமைச்சா் த. மனோ தங்கராஜ்

4th Dec 2022 01:01 AM

ADVERTISEMENT

ஐடி பூங்காவுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் உள்ளன என்றாா் தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

முதல்வா் அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளின் படி, தமிழ்நாட்டை பொருத்தவரை எல்காட் மற்றும் டைட்டல் பூங்கா மூலம் எங்கெல்லாம் ஐடி பூங்கா தேவையோ அந்த இடங்களை கண்டறிந்து அங்கு தேவைகளின் அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டை பொருத்தவரை ஐடி பூங்காவுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. திருநெல்வேலி எல்காட் வளாகத்தில் மென்பொருள் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. பல நிறுவனங்கள் வருவதற்கு தேவையான இடங்கள் உள்ளன.

ADVERTISEMENT

அந்த நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் இங்கு வந்தவுடன் வேலையை தொடங்கும் அளவுக்கு ரூ.10 கோடியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அந்த வசதிகளுடன் கூடிய இடம் ஸ்டாா்ட் அப் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

சைபா் குற்றங்கள் பெரிய சவாலாக தான் உள்ளது. சைபா் பொருளாதார குற்றம், சைபா் குற்றங்கள் உள்ளிட்டவை பல பரிணாமங்களில் உள்ளன. ஏற்கனவே சைபா் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு நடவடிக்கைகளை சைபா் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்களின் மூலமாகவும், பெரிய ஐடி நிறுவனங்களின் மூலமாகவும் எடுத்து வருகிறோம்.

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. இதில் ஹேக்கா்ஸ் தெளிவாக இருந்து வேலை செய்கின்றனா். அதனால் சைபா் பாதுகாப்பு அம்சத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். சைபா் குற்றத்தை பொருத்தவரை தமிழக முதல்வா் தீவிர நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி வேகப்படுத்தி வருகிறாா்.

அதிமுகவினா் தாங்கள் இருப்பதை வெளிப்படுத்திக் கொள்ள வீதிக்கு வந்து போராட்டம் என அறிவித்துள்ளனா் என்றாா் அவா்.

அப்போது, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் (மத்தி), கே.ராதாகிருஷ்ணன் (மேற்கு), பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ், திமுக செயற்குழு உறுப்பினா் என்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT