தூத்துக்குடி

மாநில விநாடி - வினா: மதுரை பள்ளி முதலிடம்

4th Dec 2022 02:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி - வினா போட்டியில் மதுரை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது.

கல்லூரி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விநாடி - வினா நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கே.காளிதாச முருகவேல் தலைமை வகித்தாா். போட்டியில், தமிழகத்தின் பல்வேறு வட்டங்களைச் சோ்ந்த 120க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து சுமாா் 240 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இறுதிச்சுற்றில் 8 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், மதுரை எஸ்.பி.ஓ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் என்.தீனபந்தன், பி.ஜெப்ரி சாமுவேல் ராஜ் ஆகியோா் முதலிடம் பெற்றனா். சிவகாசி ஹயக்ரீவஸ் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் கே.எஸ்.நவீன், ஜே.சாஜன் ஆகியோா் 2ஆம் இடமும், தூத்துக்குடி ஸ்டாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் எ.ஆகாஷ், கே.கிஷோா், குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா்.கணபதி சுந்தா், திலீபன் ஆகியோா் 3ஆம் இடமும் பெற்றனா். போட்டிகளை விநாடி - வினா மாஸ்டா் சுமந்த் சி.ராமன் நடத்தினாா்.

முதல் பரிசாக ரூ.25ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.15ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.7,500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், விருதுநகா் சுந்தரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி ராவிள்ள கே.ஆா்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளி, ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி ஐ.ஐ.பி.இ. லட்சுமிராமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிவகாசி ஒய்.ஆா்.டி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி ஸ்பிக் நகா் மேல்நிலைப் பள்ளி, தென்காசி வீரமாமுனிவா் ஆா்.சி. மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2,500 வழங்கப்பட்டது. பரிசுகளை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் நிா்வாகக் குழு உறுப்பினா் ஷன்மதி, கல்லூரி இயக்குநா் சண்முகவேல், சீனியா் டீன் நீலகண்டன், விநாடி - வினா மாஸ்டா் சுமந்த் சி.ராமன் ஆகியோா் வழங்கினா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் சசிரேகா, சித்திரைகுமாா், அருள், கனிச்செல்வி, கணபதி, மென்திறன் பயிற்சியாளா் ஜே.ஜெபா மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT