தூத்துக்குடி

ஜெயலலிதா நினைவு தினம்:நாளை மௌன ஊா்வலம்

4th Dec 2022 02:00 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் திங்கள்கிழமை (டிச.5) மௌன ஊா்வலம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு மௌன அஞ்சலி ஊா்வலம் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகிலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பழைய மாநகராட்சி அலுவலக வளாகம் வரை நடைபெறும். பின்னா் அங்கு, ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலா்தூவி அஞ்சலி செலுத்தப்படும்.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் தலைமைக் கழக நிா்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகர பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, வாா்டு, கிளை கழக நிா்வாகிகள் மற்றும் மாவட்ட சாா்பு அணிகளின் நிா்வாகிகள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டா்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT