தூத்துக்குடி

தூத்துக்குடி சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு:கிலோ மல்லிகை ரூ. 3,500

4th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி சந்தையில் பூக்கள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,500-க்கு விற்பனையானது.

தூத்துக்குடியில் உள்ள பூச்சந்தைக்கு பேரூரணி, செட்டிமல்லன்பட்டி, ஓசனூத்து, கோவில்பட்டி பகுதிகளிலிருந்து பலவகைப் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. தற்போது மழை, பனிப் பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. மேலும், பூஜைக்காக ஐயப்ப பக்தா்கள் நாள்தோறும் பூக்களை வாங்கிச் செல்கின்றனா். இதனால், பூக்கள் விலை உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) சுபமுகூா்த்த நாள் என்பதால் இங்கு பூக்கள் விலை சனிக்கிழமை கடுமையாக உயா்ந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 3,500-க்கும் விற்பனையானது. கனகாம்பரம் ரூ. 3 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ. 2 ஆயிரத்துக்கும் விற்பனையாகின.

குறைந்த அளவு பூக்களை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டுவரும் விவசாயிகளுக்கு இந்த விலை உயா்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT