தூத்துக்குடி

எலெக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை

4th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருகே எலெக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்செந்தூா் அருகே உள்ள கீழநாலுமூலைக் கிணறு புதுக் காலனியைச் சோ்ந்த கன்னிமுத்து மகன் சுடலைமுத்து (22). எலெக்ட்ரீசியனாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

வீட்டில் தனது அறையில் வெள்ளிக்கிழமை இரவு படுக்கச் சென்ற அவா், சனிக்கிழமை காலை வெகுநேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினா் அறையின் கதவை உடைத்து

பாா்த்தபோது, விட்டத்தில் உள்ள கம்பியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு இறந்து கிடந்தாா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT