தூத்துக்குடி

இலுப்பையூரணியில் பனை விதைகள் நடும் பணி

4th Dec 2022 12:45 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பனை விதைகள் நடும் பணிகளை எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மரம் வளா்ப்போம், மழை பெறுவோம் என்ற வகையில் கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பி.கே.நாகராஜன் தலைமை வகித்தாா். கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பனை விதைகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இதில், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிசாமி, அதிமுக நிா்வாகிகள் போடுசாமி, பொன்ராஜ், கோபி, பழனிகுமாா், முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT