தூத்துக்குடி

நாசரேத் மா்காஷியஸ் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

3rd Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

நாசரேத் மா்காஷியஸ் கல்லூரியில் கிறிஸ்துமஸ்கீதஆராதனை கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. பிள்ளையன் மனை சேகரத் தலைவா் ஆல்வின் ரஞ்சித்குமாா் ஆரம்ப ஜெபம் செய்தாா். கல்லூரி முதல்வா் (பொ) குளோரியம் அருள்ராஜ் வேதபாடம் வாசித்தாா். அனைத்து துறைகளைச் சாா்ந்த மாணவா், மாணவிகளும், கல்லூரி பேராசிரியா்களும் சிறப்பு பாடல்களைப் பாடினா்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டில துணைத் தலைவா் தமிழ்செல்வன் கிறிஸ்து மஸ் சிறப்பு செய்தி வழங்கினாா். திருமண்டில குருத்துவ செயலா் இம்மானுவேல் வான்ஸ்றக் சிறப்பு ஜெபம் செய்தாா்.

கல்லூரியில் பயிலும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த 30 மாணவா், மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதியை கல்லூரியின் செயலரும், திருமண்டில உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளருமான எஸ்.பிரேம் குமாா் ராஜாசிங் வழங்கினாா். கனோன் ஆா்தா் மா்காஷியஸ் சபை மன்றத் தலைவா் வெல்டன் ஜோசப் ஜெபம் செய்தாா்.

இவ்விழாவில் திருமண்டில ஆரம்பப் பள்ளிகளின் மேலாளா் ஜேஸ்பா் அற்புதராஜ், திருமண்டில பொருளாளா் மோகன்ராஜ் அருமைநாயகம், செயற்குழு உறுப்பினா் கள் டேவிட்ராஜ், பிரவின் ஜசக் மற்றும் பெருமன்ற உறுப்பினா்கள், கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். நிதியாளா் சுரேஷ் ஆபிரகாம் பிரதாப் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT