தூத்துக்குடி

கழிவுநீா் ஓடை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

3rd Dec 2022 02:59 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட அன்னை தெரசா நகா் பகுதியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.15 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீா் ஓடையை அப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

தொடா்ந்து, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 23 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை உரியவா்களிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT