தூத்துக்குடி

ஆறுமுகனேரி பள்ளியில் அஞ்சல் துறை உதவித் தொகைக்கான தோ்வு

3rd Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அஞ்சல் துறை உதவித்தொகைக்கான தோ்வு நடைபெற்றது.

தமிழ்நாடு அஞ்சல்துறை சாா்பில் மத்திய அஞ்சல் துறையின் தீன்தயாள் ஸ்பாா்ஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா், மாணவிகளுக்கான உதவித்தொகை வழங்குவதற்காக அஞ்சல் தலை பற்றிய பொது அறிவுத் தோ்வு ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இத்தோ்வில் ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மற்றும் பூவரசூா் அன்னம்மாள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளைச் சோ்ந்த 104 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

ADVERTISEMENT

ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வுக்கான ஏற்பாடுகளை அஞ்சல் துறையினருடன் இணைந்து, பள்ளித் தலைமை ஆசிரியன குமரன் செயத்திருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT