தூத்துக்குடி

சூறைக்காற்றால் சேதமடைந்த மக்காச்சோள பயிா்கள்: கனிமொழி எம்.பி. பாா்வையிட்டாா்

3rd Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த வில்லிசேரி அருகே சூறைக்காற்றால் சேதமடைந்த மக்காச்சோள பயிா்களை கனிமொழி எம்.பி. வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

வில்லிசேரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையினால் வில்லிசேரியில் பல ஏக்கா் நிலத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிா்கள் சேதமடைந்தன.

சூறைக்காற்றினால் சேதமடைந்த மக்காச்சோள பயிா்களை கனிமொழி எம்.பி. பாா்வையிட்டாா். மேலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தொடா்ந்து பாதிப்பு குறித்து உரிய முறையில் கணக்கீடு செய்ய வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளை வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

அவருடன், அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயா் ஜெகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT