தூத்துக்குடி

கோவில்பட்டியில் திடீா் சாலை மறியல்

3rd Dec 2022 02:59 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நகராட்சி பள்ளி முன்பு சிற்றுந்து நிறுத்துவதை தடை செய்யக் கோரி, அப்பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமாா் 200க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி முன்பு தினமும் சிற்றுந்துகள் நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனா். இதனால் இடையூறு ஏற்படுவதாகவும், சிற்றுந்து நிறுத்துவதை தடை செய்யக் கோரியும் பலமுறை கோரிக்கை விடுத்தாா்களாம். ஆனால் எந்தவித பலனும் கிடைக்காததையடுத்து, அப்பள்ளி தலைமையாசிரியா் சுப்பாராயன் தலைமையில் ஆசிரியா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டாட்சியா் மகாலட்சுமி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினா். இதனால் சுமாா் 20 நிமிடம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT