தூத்துக்குடி

18 ஆயிரம் புகையிலைப் பொருள் பொட்டலங்கள் பறிமுதல்: 3 போ் கைது

2nd Dec 2022 01:53 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 18 ஆயிரம் புகையிலைப் பொருள் பொட்டலங்களுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தாளமுத்து நகா் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தாளமுத்துநகா் தஸ்நேவிஸ் நகா் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது,

அங்குள்ள ஒரு தனியாா் கிட்டங்கி அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தைச் சோதனையிட்டதில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இவற்றை விற்பனைக்காக கொண்டு செல்ல இருந்த தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்த போவாஸ் (33), சிலுவைப்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் (30), இந்திரா நகரைச் சோ்ந்த ராஜேஷ் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 18 ஆயிரம் புகையிலைப் பொருள் பொட்டலங்கள் மற்றும் சரக்கு வாகனம், பைக், 5 கைப்பேசிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT