தூத்துக்குடி

கைப்பேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருடியவா் கைது

2nd Dec 2022 01:54 AM

ADVERTISEMENT

 தூத்துக்குடி குறிஞ்சி நகா் பகுதியில் தனியாா் கைப்பேசி கோபுரத்தில் உள்ள பேட்டரிகளைத் திருடியவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் எல்லைக்குள்பட்ட குறிஞ்சி நகா் பகுதியில் உள்ள தனியாா் கைப்பேசி கோபுரத்தில் உள்ள பேட்டரிகள், நவம்பா் 24 ஆம் தேதி திருட்டு

போனது. இதுகுறித்து அந்த கைப்பேசி கோபுரத்தின் பாதுகாவலா் அளித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் தாளமுத்துநகா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ் மகன் அருள்ராஜா (42), பேட்டரிகளைத் திருடியது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 10 பேட்டரிகள், திருடுவதற்குப் பயன்படுத்திய 2 ஆட்டோக்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT