தூத்துக்குடி

கோவில்பட்டி பள்ளியில் மின் சிக்கன விழிப்புணா்வு நிகழ்ச்சி

2nd Dec 2022 01:54 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி ஈ.வே.அ.வள்ளிமுத்து உயா்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்வாரிய கோவில்பட்டி கோட்ட மின்வாரிய அலுவலகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, உதவிப் பொறியாளா்கள் மாரீஸ்வரன், லட்சுமிபிரியா ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா்.

இளநிலைப் பொறியாளா் கண்ணன், சிறப்பு ஆக்க முகவா் பாலமுருகன் ஆகியோா் மின் சிக்கனம் குறித்துப் பேசினா். மாணவா்-மாணவிகளின் கேள்விகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் பதிலளித்தனா். ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT