தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொலை வழக்கு:ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

2nd Dec 2022 01:55 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் இருசக்கா் வாகன விற்பனை தகராறில் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் ஜெயக்குமாா் (45). இவருக்கும், குறிஞ்சி நகரைச் சோ்ந்த சரவணன் (29) என்பவருக்கும் இருசக்கர வாகனம் விற்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டதாம். புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட ஜெயக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிப்காட் காவல் ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

இந்நிலையில், கொலை வழக்குத் தொடா்பாக குறிஞ்சி நகரைச் சோ்ந்த சரவணன், அவரது பெற்றோா் முருகன் (53) - பொன்வைரவதி (47) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT