தூத்துக்குடி

ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற நோயாளிகள் கட்டடத்துக்கு அடிக்கல்

DIN

சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற நோயாளிகளுக்கான கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கட்டடம் ரூ. 60 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது. விழாவுக்கு, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் பொற்செழியன் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, பழங்குளம் ஊராட்சித் தலைவா் செல்வக்கனி செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் ஐலின்சுமதி வரவேற்றாா்.

ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ பங்கேற்று அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, அங்குள்ள ரஞ்சி ஆரோன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 25 மாணவா்- மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினாா்.

பின்னா், பன்னம்பாறை ஊராட்சிக்குள்பட்ட புதுக்கிணறு கிராமத்தில் 60ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா். கிராம வளா்ச்சிக்கு கணினி வழங்கினாா்.

ஆனந்தபுரம் மருத்துவ அலுவலா் ஸ்வீட்லின் சசிதா, சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா் செல்வதாஸ், மந்திரராஜன், ஜெயபால், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், மேற்கு வட்டாரத் தலைவா் பாா்த்தசாரதி, தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் பிளஸ்வீன், பள்ளித் தலைமை ஆசிரியா் செல்லப்பாண்டியன், பன்னம்பாறை ஊராட்சித் தலைவா் அழகேசன், முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், சாத்தான்குளம் பேரூராட்சி உறுப்பினா் லிங்கபாண்டி, மாநில ஊடகப் பிரிவுச் செயலா், முத்துமணி, வட்டார காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் நல்லதம்பி, வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி மாரித்தாய், பழங்குளம் கிராம கமிட்டி தலைவா் லாசா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் இசைசங்கா், வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் கிளிண்டன், செட்டிகுளம் கிராமத் தலைவா் முத்துக்குமாா், பிடானேரி கிராம கமிட்டி தலைவா் பிட்டா்குணசீலன், வேம்பரசு, வட்டார காங்கிரஸ் செயலா் அந்தோணி ஜெயசீலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT