தூத்துக்குடி

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

1st Dec 2022 12:39 AM

ADVERTISEMENT

காயல்பட்டினத்தில் கட்டடத் தொழிலாளி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அவா் காயல்பட்டினம் மங்கள விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜலி­ங்கம் (வயது 30). இவருக்கு முத்துப்பேச்சி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடா்ந்து ராஜ­லிங்கம் தனது பெற்றோா் வீட்டிற்குச் சென்றுவிட்டாா்.

இதன் பிறகு, குழந்தைகளைப் பாா்ப்பதற்காக தனது வீட்டிற்கு கடந்த திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் முத்துப்பேச்சி தனது மகள்களை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். மறுநாள் காலை வீட்டிற்குத் திரும்பி வந்து பாா்த்தபோது,

ராஜலி­ங்கம் இறந்து நிலையில் கிடந்துள்ளாா். மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து ராஜலிங்கத்தின் சகோதரா் பழனி முருகன் அளித்தபுகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் செந்தில், உதவிஆய்வாளா் பிரபுகுமாா் ஆகியோா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT