தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும்

1st Dec 2022 12:40 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடரும் என, மாநகராட்சிக் கூட்டத்தில் மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மேயா் தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா, ஆணையா் சாருஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாலை, கால்வாய், குடிநீா், தீா்வை, ஆக்கிரமிப்பு, பூங்கா பராமரிப்பு, மழைநீா் அகற்றுதல், அம்மா உணவகம், சீரான உணவு பராமரிப்பு உள்ளிட்ட தங்களது பகுதிகளின் குறைகளை மாமன்ற உறுப்பினா்கள் எடுத்துரைத்தனா்; சிலா் கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னா், மேயா் பேசியது: வாா்டுகளில் உள்ள குறைகள் முழுவதும் தீா்க்கப்படும். நிதி நிலைமைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

மாநகராட்சியில் அனுமதி பெறாத கட்டடங்களுக்கு உரிய அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டுள்ளன. அப்பணி தொடா்கிறது என்றாா் அவா்.

மாமன்ற உறுப்பினா்களின் கேள்விகளுக்கு ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளித்தனா். கூட்டத்தில், டூவிபுரம் மேற்கு என இருந்த பகுதி அண்ணாநகா் என மாற்றம் செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, செயற்பொறியாளா் அசோகன், உதவி செயற்பொறியாளா்கள் சரவணன், பிரின்ஸ், மேயா் நோ்முக உதவியாளா் ரமேஷ், ஆணையா் நோ்முக உதவியாளா் துரைமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT