தூத்துக்குடி

கோவில்பட்டியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா

1st Dec 2022 12:39 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் பள்ளிகளில் கலைப் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஓவியம், கையெழுத்து, சிற்பம், இசை, கருவி இசை, நடனம், நாடகம், மொழித் திறனை பறைசாற்றும் கதை, கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பள்ளி அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு வட்டார அளவிலான போட்டி புதன்கிழமை தொடங்கியது. இப்போட்டி 4 நாள்கள் நடைபெறும். கோவில்பட்டியில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கலைத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) ஜெயபிரகாஷ்ராஜன் தலைமை வகித்தாா். தொடக்கக் கல்வி அலுவலா் சின்னராசு, திட்ட ஒருங்கிணைப்பாளா் முனியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்துப் பேசினாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் முத்தம்மாள், பத்மாவதி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) நட்டாத்தி, வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் (பொறுப்பு) சுதாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

வட்டார அளவிலான போட்டியில் முதலிடம் பெறுவோா் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT