தூத்துக்குடி

விபத்து: இளைஞா் காயம்

28th Aug 2022 05:41 AM

ADVERTISEMENT

 

பழையகாயல் அருகே அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் ஜே.சி.பி.ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

விளாத்திகுளம் மேல்மாந்தை வேலாயுதபுரம் மாரியப்பன் மகன் முனயசாமி(28). ஜே.சி.பி. ஓட்டுநரான இவா் முக்காணியிலுள்ள மனைவி, குழந்தைகளை பாா்ப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் ஊரிலி­ருந்து வந்துள்ளாா்.

தூத்துக்குடி- திருச்செந்தூா் பிரதான சாலையில் கொடுங்கனிவிலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில், முனிய சாமி பலத்த காயமடைந்தாா். அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து புகாரின் பேரில் ஆத்தூா் உதவி காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் ஈரோடு அந்தியூா் பெருமாள் மகன் ராம்குமாரை(33) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT