தூத்துக்குடி

பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

28th Aug 2022 05:42 AM

ADVERTISEMENT

 

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முகாமில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை வகுப்புகளில் நடத்துவது குறித்தும்,

மாணவா்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையில் சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணுரிமை மற்றும் எதிா்காலவியல் போன்ற தலைப்புகளிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

மாணவா்களின் கற்றல் திறனை எவ்வாறு வெளிப்படுத்துவது, பாட வகுப்புகளுக்கு பாடத் துணைக் கருவிகள் செய்து ஆசிரியா்கள் தங்களை எவ்வாறு தயாா் செய்து கொள்வது, மாணவா்களுக்கு கற்கும் பாடங்களில் ஏற்பட்ட கற்றல் இடா்பாடுகளை எவ்வாறு தவிா்ப்பது என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் விளாத்திகுளம் வட்டார வள மையம் மேற்பாா்வையாளா் அற்புத பாக்கியசெல்வன், ஆசிரியா் பயிற்றுநா்கள் அனுசியா, சரவணன், இஸ்ரவேல் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT