தூத்துக்குடி

பழனியப்புரம் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாம்

27th Aug 2022 12:30 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகேயுள்ள பழனியப்பபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு தலைவா் ஜனகா் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா். கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லத்தம்பி, ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி, ஊராட்சி உறுப்பினா் ஈசாக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேகர குருவானவா் ஜேசன் ஆரம்ப ஜெபம் நடத்தினாா். வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்திபன் வரவேற்றாா். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன் விளக்கிப் பேசினாா்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சந்தோஷ், சாம்போசிவன்ராஜ், சற்குணம் ஆகியோா் 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்தனா்.

அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. மருத்துவ திட்டங்கள் குறித்த கண்காட்சி இடம்பெற்றது. ஆழ்வாா்திருநகரி மருத்துவ அலுவலா்கள் விஜயகுமாா், பாபு, விரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சாலைபுதூா் மருத்துவ அலுவலா் டயானா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT