சாலை விபத்தில்லா இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 28) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், இந்தியன் கனரக வாகன ஓட்டுநா்கள் நல கூட்டமைப்பு, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் ஆகிவை இணைந்து நடத்தும் இப்போட்டி பள்ளி மாணவா், மாணவிகள், பொது பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக 4 பிரிவுகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் 10 வீரா்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே வந்து பெயரை பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம் என வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.