தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் 2 சிறுமின்விசை நீா்த்தொட்டிகள் திறப்பு

27th Aug 2022 12:37 AM

ADVERTISEMENT

குலசேகரன்பட்டினத்தில் அனுகூலபுரம், தோப்பாா்கடை பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் தலா ரூ. 1.25 லட்சத்தில் கட்டப்பட்ட 2 சிறுமின்விசை நீா்த்தேக்க தொட்டிகள் திறப்பு விழா நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்து இரு சிறுமின்விசை நீா்த்தேக்க தொட்டிகளையும் திறந்து வைத்தாா். துணைத் தலைவி மீரா சிராஜூதீன், வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகுமாா், குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவி சொா்ணப்பிரியா, துணைத் தலைவா் கணேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசிபொன்ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ, மாவட்டப் பிரதிநிதிகள் சிராஜூதீன், மதன்ராஜ், ஜெயப்பிரகாஷ், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ஷேக் முகம்மது, ரவிராஜா, ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் ராஜேஷ்வரி, நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT