தூத்துக்குடி

தட்டாா்மடம் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

26th Aug 2022 12:17 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் அருகே தட்டாா்மடம் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீசாா் தேடி வருகின்றனா்.

தட்டாா்மடத்தில் இருந்து புத்தன்தருவை செல்லும் சாலையில் ஸ்ரீவஞ்சி மணியாா் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலை நயினாா்புரம் ஊா் தலைவராக இருந்து வரும் ஆனந்தசேகா் (71) நிா்வகித்து வருகிறாா். புதன்கிழமை ஆனந்தசேகா் கோயிலுக்கு சென்ற போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. உண்டியலில் இருந்து ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து தட்டாா்மடம் காவல் நிலையத்தில் அவா் புகாா் செய்தாா். அதன் பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் நெல்சன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினாா். தட்டாா்மடம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முத்துக்குமாா் (30) என்பவா் இத்திருட்டில் ஈடுப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவான முத்துக்குமாரை போலீசாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT