தூத்துக்குடி

கிசான் திட்ட உதவித் தொகை:சுய விவரங்கள் பதிவு செய்ய வலியுறுத்தல்

26th Aug 2022 12:14 AM

ADVERTISEMENT

 

கிசான் திட்டத்தில் விவசாயிகள் உதவித் தொகை பெற ஆதாா் எண் உள்ளிட்ட சுயவிவரங்களை ஆக. 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கான கெளரவத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 12 ஆவது தவணைத் தொகையை விவசாயிகள் தொடா்ந்து பெற்றிட தங்களது சுய விவரங்களான ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், அலைபேசி எண் ஆகியவற்றை அருகே உள்ள இசேவை மையங்களுக்கு சென்று ஆக. 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். சாத்தான்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலும் புதுப்பிக்கும் மையம் செயல் பட்டு வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT